Home இலங்கைலொஹான் ரத்வத்த நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார்!

லொஹான் ரத்வத்த நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டார்!

லொஹான் ரத்வத்தவின் மனு மீளப் பெறப்பட்டது!

by admin

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (09) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் (07.12.24) விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அவரை இன்றுவரை (9ம் திகதி வரை) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமை குறி்பிடத்தக்கது.

லொஹான் ரத்வத்தவின் மனு மீளப் பெறப்பட்டது!

மிரிஹானவில் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக பாகங்கள் பொருத்தி தயாரிக்கப்பட்ட வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தன்னைக் கைது செய்வது சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மீளப்பெறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (09) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

லொஹான் ரத்வத்த சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம், தனது கட்சிக்காரருக்கு தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.

இதன்படி, இந்த மனுவை மேலும் தொடர விரும்பவில்லை எனவும், அதனை மீளப் பெறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, மனுவை மீளப்பெற அனுமதி வழங்கினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More