பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் (73) காலமானார். ஜாகிர் ஹுசைன் ) நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
1951 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி இந்தியாவின் மும்பையில் பிறந்த ஹுசைன் ஒரு பிரபலமான தபேலாவாதியான அல்லா ரக்காவின் மூத்த மகனாவாா் . சிறு வயதிலிருந்தே இசையின் மீது இயல்பாக ஈர்க்கப்பட்ட அவா் புனித சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளாா்.
சாஸ்’ மற்றும் ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ போன்ற சில படங்களில் தோன்றியுள்ள ஜாகிர் உசேன் கடைசியாக வெள்ளித்திரையில் 2024ல் வெளியான ‘மங்கி மேன்’ படத்தில் தோன்றியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது