Home இலங்கைசட்டவிரோத மணல் கடத்தல் – துரத்தி பிடித்த  காவல்துறையினா்

சட்டவிரோத மணல் கடத்தல் – துரத்தி பிடித்த  காவல்துறையினா்

by admin
அனுமதியின்றி மணலை கடத்தி சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை      வீதியில் துரத்தி சென்று கைப்பற்றியதுடன் , அதன் சாரதிகளையும் சாவகச்சேரி   காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.   யாழ்ப்பாணம் – மன்னார் நெடுஞ்சாலையில் , பயணித்த மூன்று டிப்பர் வாகனத்தை   காவல்துறையினா்   வழிமறித்த போது ,   காவல்துறையினரின் கட்டளையை மீறி டிப்பர் வாகனங்கள் பயணித்துள்ளன.
அதனால்   காவல்துறையினா் அவற்றை துரத்தி சென்ற வேளை பின்னால் சென்ற டிப்பர் வாகனம் மணலை வீதியில் கொட்டி ,   காவல்துறையினா்  தம்மை பின்தொடராத வகையில் வாகனத்தினை செலுத்தியுள்ளனர்.
இருந்த போதிலும்  காவல்துறையினா் அவற்றை துரத்தி சென்று மூன்று வாகனங்களையும் மடக்கி பிடித்து அவற்றை கைப்பற்றியதுடன் , வாகன சாரதிகளையும் கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட சாரதிகளும் , டிப்பர் வாகனமும்    காவல்  நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More