15
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் காவல்துறையினரினால் முற்றுகையிடப்பட்டு 60 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருவதாக மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினா் அவ்விடத்தை சுற்றி வளைத்தனர்.
அவ்விடத்தில் இருந்து சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட காஸ் அடுப்பு, சிலிண்டர் , 60 ஆயிரம் லீட்டர் கோடா என்பவற்றை மீட்டதுடன் , உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அங்கிருந்த நபரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட பொருட்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணம் காவல்துறையினா் சந்தேகநபரை காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love