Home இலங்கை  20 ஆம் ஆண்டு சுனாமி  நினைவேந்தல்

 20 ஆம் ஆண்டு சுனாமி  நினைவேந்தல்

by admin

உலகளாவிய ரீதியில் 2004 ஆம் ஆண்டு பாரிய சேதங்களை ஏற்படுத்திய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்பட்டு 20 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) இடம் பெற்று வரும் நிலையில் சுனாமி  அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் தேசிய பாதுகாப்பு தினம் இன்றைய தினம்(26) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நினைவு கூறப்பட்டது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இதேவேளை   மன்னார் பிரதான பாலத்தடி இல்  மன்னார் பிரதேச சபை முன்னாள்உறுப்பினர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இடம் பெற்றது. உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 10.25 மணியளவில் குறித்த கடற்கரை பகுதியில் தீபம் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
  சமூக செயற்பாட்டாளர் பெனடிற் , தமிழீழ விடுதலை இயக்கம்( ரெலோ )கட்சியின் மன்னார் மாவட்ட  பொறுப்பாளர் டானியல் வசந், ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்   இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் இணைந்து  நினைவு சுடரை ஏற்றி நினைவஞ்சலியை ஆரம்பித்து வைத்த நிலையில் அதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட மீனவர்கள்,வர்த்தகர்கள்,பிரதேச சபை முன்னாள்  உறுப்பினர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்   சுடர் ஏற்றி,மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 அத்துடன்  யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில்   சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, ஈகை சுடர் ஏற்றப்பட்டு பொது நினைவு துபிக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது பெருமளவான பொதுமக்கள், மதகுருமார்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் உறவினர்கள் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் மல்கினர்.

கடந்த 2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை பேரனர்த்தம் காரணமாக பல்லாயிர கணக்கானவர்கள் உயிரிழந்ததுடன் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் அழிந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More