40
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்சவுக்கு, கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பான வாக்குமூலத்தைப் பதிவு செய்ய குற்றவியல் விசாரணை திணைக்களம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை (ஜன. 03.01.25) ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் நேற்று ( 27.12.24) இரண்டரை மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
Spread the love