சுவீடனில் நேற்று (04.02.25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சுவீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் உள்ள ஓரேப்ரோ நகரில் அமைந்துள்ள கேம்பஸ் ரிஸ்பெர்க்ஸ்கா என அழைக்கப்படும் வயது வந்தோருக்கான கல்வி நிறுவனத்தில் இந்த அனா்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் கல்வி நிறுவனம், 20 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கின்ற நிலையில் அங்கு தங்கியிருந்து படித்து வந்த மாணவர்கள் பெரும்பாலானோர் பரீட்சை முடிந்ததை அடுத்து தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில் ஒரு சில மாணவர்கள் கல்வி நிறுவனத்தில் தங்கியிருந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த கல்வி நிறுவனத்தில் புகுந்த இனம் தெரியாத நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் இ ல் 11 பேர் பலியானார்கள். அதை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? இந்த சம்பவத்தின் பின்னணி என்ன? என்பது குறித்து அந்நாட்டு காவல்துறையினா் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.