Home இலங்கைகாவல்துறை உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

காவல்துறை உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

by editorenglish

காவல்துறை விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் மற்றும்  பிரதி பொலிஸ்மா அதிபர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, இந்த இடமாற்றங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, காவல்நிலைய பொறுப்பதிகாரிகள் சிலருக்கும் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய, காவல் நிலைய பொறுப்பதிகாரிகள் தங்கள் வழமையான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More