133
8 அணிகள் பங்கேற்கும் “சாம்பியன்ஸ்” வெற்றிக்கிண்ணத் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியானது வருகின்ற 19 ஆம் திகதி தொடங்குகின்றது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் உள்ள ஆடுகளங்களில் இந்தத் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், இந்தத் தொடரில் இந்தியாவை வீழ்த்துவதே தமது உண்மையான பணி என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார்.
“அண்மையில் நடந்த போட்டிகளில் எமது அணி சிறப்பாக விளையாடியுள்ளது. இந்த வெற்றிக்கிண்ணத்தை வெல்வது மட்டுமல்ல; இந்தியாவைம் வீழ்த்துவதே எமது உண்மையான பணி” என்று பாகிஸ்தான் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
Spread the love