Home இலங்கைமூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று – பல்வேறு தரப்பினரும் அஞ்சலி!

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி கிரியைகள் இன்று – பல்வேறு தரப்பினரும் அஞ்சலி!

by admin
மூத்த ஊடகவியலாளர் பாரதியின் புகழுடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் , ஊடக நிறுவன ஆசிரியர்கள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் , பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி உடல் நலகுறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் , திருநெல்வேலியில் (திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வியாழக்கிழமை இறுதி கிரியைகள் நடைபெறும் நிலையில் பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More