Home இலங்கைகோத்தாபயவினைப் பதவிநீக்கம் செய்ய யு.எஸ்.எய்ட் அமைப்பின் மூலமான நிதி பயன்பட்டதா?

கோத்தாபயவினைப் பதவிநீக்கம் செய்ய யு.எஸ்.எய்ட் அமைப்பின் மூலமான நிதி பயன்பட்டதா?

by editorenglish

இலங்கையின் பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் இன்று (13) கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கைக்கு நிதி உதவி வழங்கியமை மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவினைப் பதவிநீக்கம் செய்ய யு.எஸ்.எய்ட் அமைப்பின் மூலமான நிதி பயன்பட்டதா என்றும் இலங்கைக்கான தற்போதைய அமெரிக்கத் தூதர் ஜூலி சங் அவர்கள் மாணவர்களிடையே மாற்றுப் பாலினச் சேர்க்கை (LGBTQ) நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றாரா என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த ஆரப்பாட்டமானது நேற்று (13/2/2025) இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More