நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று கவலை வெளியிட்டார்.
நேற்று (17/2/2025) அன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல், மாத்தளையைச் சேர்ந்த ஒருவரை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வருவதாக தெரிவித்தார்.
அக்குரெஸ்ஸ மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸவிலும் இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அரசாங்கப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துகளை வெளியிடும் மக்களை அச்சுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
மக்களை ஒடுக்குவதையும் ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதையும் அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும், வலியுறுத்தினார்.

