302
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் திருத்தங்களின்றி பெரும்பான்மையுடன் இன்று (17) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பின் போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்தவொரு வாக்கும் வழங்கப்படவில்லை.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தின் 2 சரத்துகள், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமென அண்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love

