107
யாழ். வடமராட்சி கிழக்கில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று நேற்று (19/2/2025) மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டுச் சம்பவம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் தந்தை, மகன் பேரன் என மூவர் மீது நடத்தப்பட்டுள்ளது.
குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர், தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து வாகனம் மற்றும் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மருதங்கேணிக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Spread the love