ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றிற்கிடையிலான ஒருங்கிணைப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னரே மீண்டும் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒருங்கிணைப்புப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான இறுதி முடிவு இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டமானது 26.02.2025 அன்று திட்டமிடப்பட்டிருந்தாலும், அது விடுமுறை நாள் என்பதால் அக் கூட்டமானது ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, அது இன்னுமொரு திகதியில் நடைபெறும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும், அவர்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இறுதி உடன்பாடு இன்னமும் எட்டப்படவில்லை. இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லாதமை காரணமாக தற்காலிகமாக விவாதங்களை நிறுத்தியுள்ளன.
எனினும், வரவிருக்கும் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவது குறித்து இரு கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க அரசியல் நன்மைகளை ஏற்படக்கூடும் என இரு கட்சிகளின் உறுப்பினர்களும் வலுவாக நம்புகின்றனர்.