யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்றைய தினம் சிறைச்சாலைக்கு நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தொடர் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இதேநேரம் இந்திய மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்துமாறு உள்ளூர் மீனவர்களும் கோரிக்கை விடுத்து வருவதனால் அதுதொடர்பில் ஆராயும் நோக்கில் இந்திய மீனவர்களை சிறையில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது 40 நாட்களாக சிறையில் உள்ளபோதும் ஒரேயொரு தடவை மட்டும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. எனவே தொலைபேசியில் உரைநாடுவதற்கான அனுமதியை வழங்குவதற்கு உதவுமாறும், சிறைச்சாலையில் இருந்தாலும் வெளியுலக நடப்புகளை அறிந்துகொள்ள செய்திகளை பார்வையிட சிறைக் கூடத்தில் ஓர் தொலைக் காட்சி வசதியினை ஏற்படுத்தி தருமாறு இந்திய மீனவர்கள் தரப்பில் கோரப்பட்டது.