Home இலங்கைவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

by editorenglish

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, பண்டாரிக்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

வீட்டில் உள்ள அவரது மனைவி ஆசிரியராக பணி புரிவதால் பாடசாலைக்கு சென்ற நிலையில், அந்த நபர் மட்டும் வீட்டில்  தனியான  இருந்துள்ளாா். பாடசாலை முடிந்து மனைவி வந்து பிற்பகல்   கணவரை அழைத்த போதும் நீண்ட நேரமாக வீட்டு வாயில் திறக்கப்படவில்லை. இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் மதிலால் ஏறி சென்று கதவை திறந்த போது கணவன் அறை ஒன்றில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவர் தலையில் காயமும் காணப்பட்டுள்ளது.

 இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறைக்குத் தகவல் வழங்கப்பட்டது. பண்டாரிக்குளம் காவல்துறையினர் சென்று சாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நில அளவைத் திணைக்களத்தில் பணி புரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்ற சி.மகேந்திரராஜா (வயது 60) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்தவாராவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More