சுற்றுலா விசாக்கள் மூலம் நாட்டுக்குள் சென்று யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் தீவிரவாத மதப் பிரச்சாரகர்களாகவும், மரவேலை செய்பவர்களாகவும் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் 15 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு துறை புலனாய்வாளர்கள் குழுவினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனா்.
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி குறித்த செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தால் வழங்கப்பட்ட இலவச சுற்றுலா விசாகளின் கீழ் நாட்டிற்கு சென்றுள்ளனா்.
அவர்களில் இருவர், யாழ்ப்பாணத்தின் மாதல் பகுதியில் நோய்களை குணப்படுத்துவதற்கான தீவிரவாத மத சேவையை நடத்த தயாராகி வந்தனர், இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள இந்து தேசியவாத அமைப்புகளால் அவர்களுக்கு எதிராக ஒரு போராட்டடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு மத குருமார்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அத்துடன் , யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள ஒரு மரக் கொட்டகையில் சிற்ப வேலை செய்து கொண்டிருந்த மேலும் 08 இந்தியப் பிரஜைகளும் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள உணவகங்களில் பணிபுரிந்து வந்த 05 இந்தியப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டு, பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு நேற்று சனிக்கிழமை (08) நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

