பிாித்தானியாவுக்கு அருகே நடுக் கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலும் போர்த்துக்கல் சரக்கு கப்பல் ஒன்றும் மோதி தீ பிடித்ததில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். நடுக் கடலில் அமெரிக்க எண்ணெய் கப்பலின் பக்கவாட்டில் சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், எண்ணெய் கப்பல் தீப்பிடித்து எரியும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிாித்தானியா,நோர்வே, டென்மார்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு இடையில் அமைந்திருக்கும் வடக்கு கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகின்ற நிலையில் யார்க்ஷையர் கடற்கரைக்கு அருகே இன்று எண்ணெய் கப்பலும் சரக்கு கப்பலும் நேருக்கு நேர் மோதி கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோதிக் கொண்ட வேகத்தில் இரண்டு கப்பல்களும் தீப்பிடித்ததனால் இரு கப்பல்களிலும் பணியாற்றிய ஊழியர்கள் 32 போ் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பலா் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதுடன் உயிாிழந்தாவா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
முதற்கட்ட தகவலின்படி போர்த்துக்கல்லைச் சேர்ந்த சோலாங் என்ற சரக்குக் கப்பலும் , ஸ்டேனா இமாக்குலேட் என்ற அமெரிக்க எண்ணெயக் கப்பலுமே விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. விபத்து குறித்த தகவல் வெளியானவுடன் பிாித்தானிய கடலோர காவல் படை வீரர்கள் மீட்புப் பணிக்காக அங்கு விரைந்துள்ளனா்.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஊழியர்கள் சிலர் கடலில் குதித்துள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

