தென்னியங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் உரிய தீர்வு கிடைக்கும் வரை மாணவர்களைப் பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட தென்னியன்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி நேற்றுத் திங்கட்கிழமை (10/03/2025) பெற்றோர் பாடசாலை வாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பாடசாலை வாயில் கதவை மூடி காலை 7.30 தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கோட்டக் கல்வி அலுவலகத்தில் இருந்தோ வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்தோ அதிகாரிகள் வந்து தமக்கான பதிலைத்ப் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போதும் காலை பதினொரு மணிவரை குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் எவரும் சென்று பதில் ஏதும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது