பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவைத் தொடர்ந்து இன்று(11) மணிலா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாா். அவா்
ஹொங்கொங்கிலிருந்து திரும்பியவுடன் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள்” என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 2016-2022 காலப்பகுதியில் இவரது ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய போதைப்பொருளுக்கு எதிரான போர் தொடர்பான விசாரணைகளுக்கமைய இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுட்டெர்டேவின் இந்த போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 6,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனா். எனினும் மனித உரிமை அமைப்புகள் இந்த எண்ணிக்கை 30,000 வரை இருக்கலாம் என கூறுகின்றன, இதில் பலர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைதுக்கு முன், ஹொங்கொங்கில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய டுட்டெர்டே, “இது என் விதியாக இருந்தால், அதை ஏற்றுக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டால், சிறையில் அடைக்கப்பட்டால், அதை எதிர்க்க முடியாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
அவரது கைது, பிலிப்பைன்ஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடையே நீதி கிடைத்ததாக உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. டுட்டெர்டே தற்போது அதிகாரிகளின் பிடியில் உள்ளார் மற்றும் அவரது உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், அரசு வைத்தியர்களால் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

