237
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநோயாளர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியசாலை தரப்பினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள தெல்லிப்பளை காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த வைத்தியசாலையில் துப்பரவு பணியில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா் எனவும் எனவும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love