19
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் . தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தினை செலுத்தினர்.
தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையிலான அணியினர் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை நகர சபை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளான 16 சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.
வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடுவுள்ள சுயேட்சை குழுவொன்றுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும் தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love