84
ஷான் புத்தா எனப்படும் இலங்கையின் பிரபல சொல்லிசைப் (ராப்) பாடகர், மீகொடை அரலிய உயன பகுதியில் வைத்து 9 மில்லி மீட்டர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் மன்னார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் குறித்த பாடகரின் முகாமையாளரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் மாத்தறை, கொட்டவில காவல் நிலையத்தில் கடமையாற்றிய போது இந்த துப்பாக்கி திருடப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
Spread the love