நேற்றையதினம் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மேஷ்வர் எனும் நகரில் பேருந்து நிறுத்தத்தில் பாடசாலை செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்த 7 மாணவிகள் மீது அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் சென்ற கும்பல் ஒன்று வலுக்கபட்டயமாக ரசாயனம் கலந்த வண்ணப்பொடியை வீசத் தொடங்கியது.
அந்நேரத்தில் பேருந்து வந்தமையால் மாணவிகள் பேருந்தில் ஏறிய போதும் அந்தக் அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்று பேருந்தில் ஏறி குறித்த 7 மாணவிகள் மீது மேலும் வண்ணப்பொடியை பூசியுள்ளது. அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபினைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது.
இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் 7 மாணவிகளில் 4 போின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கடக் GIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏனைய மூவர் உள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர் மற்றும் அவ்வூர் மக்கள் இடையே கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. வண்ணம் பூசிவிட்டு தப்பியோடிய அந்த கும்பலை தேடும் நடவடிக்கையில் காவல்துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது