யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குறித்த பெண்ணிடம் இருந்து ஐஸ் போதை பொருளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , பெண் திருகோணமலை பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான பெண்ணை பொலிஸார் யாழ் . நீதிமன்றில் முற்படுத்தியதை தொடர்ந்து , பெண்ணை 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
யாழில். போதையில் குடும்பத்துடன் தகராறு செய்த இளைஞன் கைது
போதையில் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞனை ஊர்காவற்துறை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவர் போதையில் , வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அது தொடர்பில் வீட்டாரால் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , குறித்த வீட்டுக்கு சென்ற காவற்துறையினர் இளைஞனை கைது செய்தனர்
குறித்த இளைஞன் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.