Home இலங்கையாழில்.சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழில்.சுமார் 12 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் சுமார் 305 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த படகொன்றினை , கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவதானித்து குறித்த படகினை கடலினுள் வழிமறித்து சோதனையிட்ட போது அதற்குள் கஞ்சா பொதிகள் காணப்பட்டன

அதனை அடுத்து படகில் இருந்த வடமராட்சி கிழக்கு முள்ளியான் பகுதியை சேர்ந்த படகோட்டியை கைது செய்த கடற்படையினர் கஞ்சா போதைப்பொருளுடன் படகினையும் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா கடல் நீரில் நனைந்த நிலையில் காணப்பட்டதாகவும் , ஈரத்துடன் அதன் எடை 304 கிலோ 600 கிராம் என தெரிவித்த கடற்படையினர் அதன் பெறுமதி சுமார் 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகு என்பவற்றுடன் , கைது செய்யப்பட்ட நபரையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி காவல்  நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More