Home இலங்கையாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்!

யாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு – 4 வீடுகள் சேதம்!

by admin

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட மின்னல் காரணமாக, 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகளும் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

உடுவில் பிரதே செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/208 கிராம சேவகர் பிரிவில் இரு குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/279 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/301 கிராம சேவகர் பிரிவில் 2 குடும்பங்களை சேர்ந்த 3 பேரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/426 கிராம சேவகர் 1 குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் என 19 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More