கொத்மலை, ரம்பொட, கெரண்டியெஎல்ல பகுதியில் 22 பேரின் உயிரைப் பறித்த விபத்து, பேருந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, பேருந்தில் அளவுக்கு மீறிய பயணிகள் பயணித்தமை மற்றும் அதிக களைப்பு காரணமாக சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டமை ஆகியவை விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் ஜாலிய பண்டார தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் தொடர்பாக விசேட குழு மூலம் தற்போது விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
அதன்பின்னர், விபத்துக்கான உறுதியான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என ஜாலிய பண்டார தெரிவித்தார்.
இதேவேளை கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்ல பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்து குறித்து விசேட காவற்துறை விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேருந்து விபத்துக்கான காரணங்களை விசாரிக்க, சிரேஷ்ட பிரதிப் இந்தப் பேருந்து விபத்துக்கான காரணங்களை விசாரிக்க, சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தலைமையிலான நான்கு மூத்த காவற்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புக் குழு, பதில் காவற்துறை மா அதிபரால் நியமிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகளின் பல அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய விசாரணைகளை நடத்தவும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க இலங்கை காவல்துறை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவும் பதில் காவற்துறை மா அதிபர் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்

