Home இலங்கைஊசி மூலம் போதைவஸ்து நுகர்ந்தவர் உயிரிழப்பு

ஊசி மூலம் போதைவஸ்து நுகர்ந்தவர் உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒருவார கால பகுதியில் அதீத போதைவஸ்து பாவனை காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.  சாவகச்சேரி , மட்டுவில் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சமயம் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்

அதனை அடுத்து, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு , அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில் , அதீத போதைவஸ்து நுகர்வு காரணமாக மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த வாரம் வடமராட்சி பகுதியில் , அதீத போதை வஸ்து நுகர்வு காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , குறித்த இளைஞனுடன் போதைவஸ்தை நுகர்ந்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்ற அனுமதி ஊடாக புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்ப காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More