211
முள்ளிவாய்க்கால் வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமெங்கும் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில், நல்லூரடியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்னால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது அமைப்பின் ஏற்பாட்டில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது. இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், பொது அமைப்புகளை சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர்.
Spread the love