கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகியுள்ளது என்றும் உத்தரவிட்ட நீதிபதி அவர்கள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளாா்
குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் காவல்துறை பாதுகாப்புடன் இன்று நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டதனை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி மேற்படி தீர்ப்பினை வழங்கியுள்ளாா்.
கல்லூரி மாணவிகளை் மற்றும் இளம்பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியுள்ளனளனா். இளம் பெண் ஒருவரின் முறைப்பாட்டின் மூலம் வெளிச்சத்துக்கு வந்ததுடன் இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒப்படைத்தது. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவா்களுகே்கே இவ்வாறு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது