நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனா். இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றுள்ளது.
நான்கு இளைஞர்களும் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டதனைத் தொடர்ந்து வென்னப்புவ காவல்துறையினா் , கடற்படையினரின் உதவியோடு நால்வரையு ம் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. .
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவா்களில் மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொருவர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் எனவும் தொிவிக்கப்படுகின்றது.
உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண் ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித் குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனப். .
சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் சகோதரர்கள் எனவும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள வென்னப்புவ காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.