Home இந்தியாகனடாவின் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளில் இரண்டு தமிழர்கள்!

கனடாவின் முக்கிய அமைச்சுப் பொறுப்புகளில் இரண்டு தமிழர்கள்!

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக கரி ஆனந்தசங்கரி - வெளியுறவு அமைச்சராக அனிதா ஆனந்!

by admin

கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சராக இலங்கை தமிழரான கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் கனடாவில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான தரப்பு வெற்றிபெற்ற நிலையில் புதிய அமைச்சரவை நியமனங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கார்னி 28 அமைச்சர்களை அமைச்சரவை பதவிகளுக்கும், மேலும் 10 பேரை வெளியுறவுச் செயலாளர்களாகவும் நியமித்துள்ளார்.

பொதுபாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட ஹரி ஆனந்தசங்கரி முன்னதாக பல அமைச்சரவை அமைச்சுபதவிகளை வகுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரான ஹரி ஆனந்தசங்கரி கடந்த 2015 ஒக்டோபர் 19 இல் நடைபெற்ற கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.

முன்னதாக சுதேச உறவுகளுக்கான அமைச்சராகவும் 2025 மார்ச் 14 முதல் நீதி அமைச்சராகவும், கனடிய சட்டமா அதிபராகவும் பணியாற்றி வருகிறார்.

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்!

கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் நடந்து முடிந்த தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் லிபரல் கட்சியின் தலைவரான மார்க் கார்னி, அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளார்.

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினர் | Indian Origin Anita Anand Become Canada Minister

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மெலானி ஜோலிக்கு பதிலாக, அனிதா ஆனந்துக்கு அந்த பதவி கையளிக்கப்பட்டுள்ளது.

அனிதா, புலம்பெயர்ந்தோரின் மகள் ஆவார். அனிதாவின் பெற்றோர் 1960களின் துவக்கத்தில் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

அனிதாவின் தாய் சரோஜ் D ராம் பஞ்சாபைச் சேர்ந்தவர், தந்தை SV ஆனந்த் ஒரு தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினர் | Indian Origin Anita Anand Become Canada Minister

பல பட்டப்படிப்புகளை முடித்த அனிதா, சட்டம், கல்வி மற்றும் பொது சேவை துறைகளில் வலுவான தடம் பதித்தவர் ஆவார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபின்னர் ஊடகங்களுக்கு ஹரி ஆனந்தசங்கரி தெரிவிக்கையில்,

கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நான் பெருமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கின்றேன்.

டேவிட் மப்பின்டியின் சிறந்த பணியை அடித்தளமாகக் கொண்டு மேலும் கட்டியெழுப்ப ஆர்வமாகவுள்ள அதேவேளை, எமது சமூகங்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், வெறுப்புணர்வுக் குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதற்கும், கனேடியர்களை நாளாந்தம் பாதுகாப்பும் முகாமை அமைப்புக்களை பலப்படுத்தவும் நான் உறுதிபூண்டுள்ளேன்.”

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More