இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் “Sri Lanka National Chess Excellency Awards 2025” எனும் விருதுகான பெயர் பட்டியலில் யாழின் இளம் சதுரங்க வீரன் வேணுகானன் நயனகேஷன் இடம்பிடித்துள்ள நிலையில், அவருக்கு வாக்களிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவர் மூன்று முறை தொடர்ச்சியாக தனது வயதுப்பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றதுடன் எட்டிற்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜோர்ஜியாவில் நடைபெற்ற 08 வயதுப்பிரிவினருக்கான FIDE உலகக்கோப்பை போட்டியில் கலந்துகொண்டதுடன், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற ஆசிய பாடசாலைகள் போட்டியில் நாட்டிற்கான பதக்கம் வென்று நாட்டிற்கும், தமிழருக்கும் பெருமை சேர்த்திருந்தார்.

