தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் அடையாளம் காணப்படாத ஒருவரின் பாதி எரிந்த உடல் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற புளத்சிங்கள காவல் நிலைய காவல்துறையினா் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனா்.
விசாரணையின் போது உயிரிழந்தவர்கள் பாதுக்க, மஹிங்கல பகுதியைச் சேர்ந்த 47 வயதான அமரசிங்க பந்துல கீதானந்த அமரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் கொல்லப்பட்டவா் தோல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுபவா் எனத் தொிவித்துள்ள காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

