Home இலங்கையாழ். பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டம் யூன் 28ஆம் திகதி – பண்பாட்டு விழா ஓகஸ்ட் மாதம்

யாழ். பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டம் யூன் 28ஆம் திகதி – பண்பாட்டு விழா ஓகஸ்ட் மாதம்

by admin

யாழ்ப்பாண பண்பாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டம் நேற்றைய தினம் (29.05.25) செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன் போதே மாவட்ட செயலர் ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய மாவட்ட செயலர்,

கலைஞர் கெளரவிக்கப்பட வேண்டும் எனவும், மாதாந்தம் ஒரு கலை நிகழ்ச்சி யாவது நடைபெறுவதற்கு ஒழுங்கமைப்பு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டத்தினை எதிர்வரும் யூன் மாதம் 28 ஆம் திகதி நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் அப் பொதுக்குழுக் கூட்டத்தில் அதிகளவான கலைஞர்கள் பங்குபற்றுவதனை கலாசார உத்தியோகத்தர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், யாழ்ப்பாண பண்பாட்டு விழாவினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More