Home இலங்கைபிரபாவின் மகனும் உயிரிழப்பு!

பிரபாவின் மகனும் உயிரிழப்பு!

by admin
ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான ச.பிரபாகரனின் மகனும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01.05.25) உயிரிழந்துள்ளார்.
நல்லூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் அக்ஷே என்பவரே உயிரிழந்துள்ளார்.

தனது தனிப்படட காரணத்திற்காக குடும்பத்தினருடன் வட இந்தியாவிற்கு சென்று விட்டு , கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான ச.பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் காரில் யாழ்ப்பாணத்தை நோக்கி கடந்த 26ஆம் திகதி பயணித்த வேளை, ஒமந்தை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் விபத்துக்குள்ளானர்.

விபத்தில் பிரபாகரன் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், அவரது மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அந்நிலையில் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரபாகரனின் மனைவியும் , மாமனாரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More