யாழ்ப்பாணத்தில் 200 லீட்டர் கோடா மற்றும் 19.5 லீட்டர் கசிப்புடன் ஒருவரை மானிப்பாய் காவல்துறையினா் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். சண்டிலிப்பாய் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த வீட்டினை காவல்துறையினா் முற்றுகையிட்ட போது, வீட்டில் இருந்து 200 லீட்டர் கோடா மற்றும் 19.5 லீட்டர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் காஸ் சிலிண்டர் உள்ளிட்டவற்றை காவல்துறையினா் மீட்டிருந்தனர்.
அதனை அடுத்து குறித்த வீட்டில் இருந்த சுன்னாகம் பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞனை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை மானிப்பாய் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


