Home இலங்கை“ரம்புக்வெல்லக்கள்”பிணையில் விடுவிப்பு!

“ரம்புக்வெல்லக்கள்”பிணையில் விடுவிப்பு!

by admin

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாக்கப்பட்ட ரம்புக்வெல்லக்கள்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர் .

கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சராகப் பணியாற்றியபோது, பதினைந்து பேரை பெயரளவில் தனது ஊழியர்களாக சேர்த்து, அவர்களுக்கு சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் மேலதிக நேர ஊதியத்தை வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 8 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு இன்று (03.06.25) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த வழக்கில் முன்னிலையாவதற்காக அவர்கள் இவ்வாறு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More