Home இலங்கைஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது!

ஆலயங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் இளைஞன் கைது!

by admin

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 20 வயதான இளைஞன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளளார்.

அண்மைக்காலமாக ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயங்களில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், 20 வயதான இளைஞனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் (03.06.25) செவ்வாய்க்கிழமை முற்படுத்தினர்.
அதனை அடுத்து , 14 நாட்களுக்கு இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More