குளியாபிட்டி-மாதம்பே வீதியில் கனதுல்ல பகுதியில் வான் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் , மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். இருவரும் குளியாபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பத்துலு ஓய பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பின்னால் அமர்ந்திருந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக வான் சாரதி மற்றும் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் . குளியாபிட்டி காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

