Home இலங்கைஇலங்கைக்கு கடத்துவதற்காக  பதுக்கி வைக்கப்பட்டிருந்த   50 கிலோ கஞ்சா மீட்பு-6 பேர் கைது: 

இலங்கைக்கு கடத்துவதற்காக  பதுக்கி வைக்கப்பட்டிருந்த   50 கிலோ கஞ்சா மீட்பு-6 பேர் கைது: 

by admin
 
சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் நேற்று சனிக்கிழமை(7) காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த .10 லட்சம் இந்திய  மதிப்பிலான 50 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் போதைப்பொருள், பீடி இலை பண்டல்கள், கடல் அட்டை, சமையல்  மஞ்சள், திமிங்கலம் துடுப்பு, சுக்கு உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தி செல்ல இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்    மீன்பிடி துறைமுகம் அருகே சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று நின்று கொண்டிருந்ததை கண்ட தனிப்பிரிவு  காவல்துறையினா்  காரில் இருந்து ஒருவர் பெரிய பை ஒன்றை எடுத்து நாட்டுப்படகில்  ஏற்றுவதற்காக கடற்கரைக்கு கொண்டு சென்றதையடுத்து  அந்த நபரை மடக்கி பிடித்த போது காரில் மேலும் இருவர் இருந்தது தெரியவந்ததையடுத்து காரை சோதனை செய்த போது காரில்  கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்த மூவரை  பிடித்து விசாரணைக்காக ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலையத்திற்கு தனிப்பிரிவு காவல்துறையினா்   அழைத்து சென்றனர்.

பின்னர் அவர்களிடம் காவல்துறையினா்   நடத்திய தீவிர விசாரணையில் கஞ்சா மூட்டைகள் படகில்  இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதாக தெரிவித்ததுடன் அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த  ஆறு நபர்களை  ர் கைது செய்த காவல்துறையினா்   நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்த  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவின்  இந்திய மதிப்பு ரூ.10 லட்சம் என்றும், பிடிபட்ட கார் ரூ.5 லட்சம்  இருக்கும் என  காவல்துறையினா்   தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More