Home இலங்கைஇந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

by admin

 

சர்வதேச இரத்த தான தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம் , யாழ் . போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்த தான நிகழ்வினை நடத்தவுள்ளது. யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.

மனிதாபிமானம் நிறைத்த இந்த செயல்முறையில் கலந்து கொள்ள  அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் , இரத்த தான முகாமில் கலந்து கொள்வோருக்கு , மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
சமூகத்தில் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும் , சூழலியல் பாதுகாப்பையும் ஒருசேர வலியுறுத்தும் நோக்குடனையே இந்த இரத்த தான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More