Home இலங்கைநல்லூர் மான் வசம்

நல்லூர் மான் வசம்

by admin

 

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்த்த பத்மநாதன் மயூரன் ஏக மனதாக  தெரிவாகியுள்ளார்.    நல்லூர் பிரதச சபையின் தவிசாளர் தெரிவிக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் நடைபெற்றது.அதன் போது தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ப.மயூரன் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வேறு யாரும் போட்டியிடாதமையால் மயூரன் தவிசாளராக ஏக மனதாக தெரிவானார்.

அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தவிசாளர் தெரிவில் சபையில் இருக்கவில்லை என சபையில் இருந்து வெளியேறியிருந்தார். தமிழ் மக்கள் கூட்டணியும், தமிழரசு கட்சியும் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிணை மேற்கொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. உப தவிசாளராக ஜெயகரனும் தெரிவாகியுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More