Home இலங்கைபுரட்சியின் ஒலி கூகி வா தியாங்கோ – கோபிகா நடராசா.

புரட்சியின் ஒலி கூகி வா தியாங்கோ – கோபிகா நடராசா.

by admin

நான் கூகி அவர்களை பற்றி ஆப்பிரிக்காவின் அரங்க நடவடிக்கைகள் மற்றும் காலனிய நீக்கச் செயற்பாட்டாளர்கள் என்ற பாடம் படிக்கும் போது சில குறிப்பிட்ட தகவல்களை கற்றதோடு கூகி பற்றிய கற்றல் நின்றுவிட்டது. கடந்த மாதம் 28 ஆம் திகதி ( 28.05.2025 ) இவரின் இறப்பு செய்தியினை வலைத்தளங்களில் பார்வையிட்டேன். அன்றிரவுப் பொழுதில் கூகி அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல் என்ற புத்தகம் என் கையில் இருந்தது. அன்று பரீட்சைக்கான மேலோட்டமாக படித்த அந்தப் புத்தகத்தினை எடுத்து முழுமையாக வாசித்தேன். அதன் பிறகு கூகியை பற்றி எழுத வேண்டும் என்ற உத்வேகம் என் மனதிற்குள் நுழைந்தது.

கென்யாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ஆப்பிரிக்க இலக்கிய உலகின் முக்கிய ஆளுமையுமான கூகி வா தியாங்கோ (பேரபi றய வுhழைபெழ) காலனித்துவத்தின் நீடித்த வடுக்கள், கலாசார அடையாளம், மற்றும் மொழியின் அரசியல் முக்கியத்துவம் ஆகியவற்றைத் தன் படைப்புகளின் மூலம் ஆழமாக ஆராய்ந்தவர்.

1938 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி கென்யாவில் பிறந்த அவர், தனது ஆரம்பகாலப் படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதினாலும், பின்னர் தனது தாய்மொழியான கிகுê (மொழியில் எழுதத் தொடங்கியதன் மூலம் ஆப்பிரிக்க இலக்கிய வரலாற்றில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.

தியாங்கோ ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் ஒரு கலாசார செயற்பாட்டாளர், கல்வியாளர், மற்றும் சிந்தனையாளர். பிரிட்டிஸ் காலனித்துவ ஆட்சியின் கீழ் கென்யா இருந்தபோது, தனது பள்ளிப் பருவத்தில் ஆங்கிலக் கல்வி முறையின் ஆதிக்கத்தை நேரடியாக அனுபவித்தார். பின்னர், உகண்டாவில் உள்ள மெகரெரே பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்று, 1964 இல் தனது முதல் ஆங்கில நாவலான “Weep Not Child” ஐ வெளியிட்டார். இது ஒரு கிழக்கு ஆப்பிரிக்க எழுத்தாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட முதல் முக்கிய நாவலாகக் கருதப்படுகிறது.

I will marry when I want  இன்று நாடகத்தினை தனது சொந்த மொழியான கிகுê மொழியில் எழுதி அரங்கேற்றியதற்காக 1977 ஆம் ஆண்டு காமட்டி எனும் சிறையில் எண் 16 இல் தனிமையில் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த அறையின் சுவர்களுக்குள் அடைபட்ட படி இலக்கியத் துறையில் தனது பணி பற்றி யோசித்தார். அவரது மாணவர்கள் ஃபனான் மற்றும் லெனின் காலனியம், ஏகாபத்தியம் பற்றிக் கூறியதை படித்திருப்பார்களா? காமிரீத்து சமூகக் கல்வி பண்பாட்டு மையத்தின் பங்கேற்பாளர்கள், வயது வந்தோர் கல்வியைத் தொடர்ந்தார்களா என்றெல்லாம் யோசித்து கொண்டிருந்தார். இதிலிருந்து கூகியின் சமூகப்பற்று, அவரின் குறிக்கோள், காலனிய நீக்கத்தின் ஆர்வம், அறிவுத் தேடல் என்பவற்றை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

மேலும், என்னை சிறைப்படுத்த காரணமான அதே மொழியில் ஒரு நாவல் எழுத வேண்டும் என எண்ணினார். தனிமையில் சிறையில் இருந்து காலனிய ஆதிக்கத்தினை எவ்வாறு தடுப்பது பற்றி சிந்தித்து கூகி ‘னுநஎடை ழn வாந உசழளள’ என்ற நாவலை தன்னுடைய தாய் மொழியான கிகுê மொழியில் எழுதினார். கடுமையான கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் கழிவரையில் மலம் துடைப்பதற்கு வைக்கப்பட்டிருந்த தாளில் இந்த நாவலை எழுதினார். கிகுê மொழியில் வெளிவந்த முதல் நாவல் என்று பெருமையும் கொண்டார். இவர் இறந்த பின் பேசப்பட்ட பல விடயங்களில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது இச் சம்பவமே.

1970களின் பிற்பகுதியில், கூகி தனது இலக்கியப் பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தினார். ‘ஒரு கோதுமை மணி’ இன்று நாவலை எழுதிய பின்னர் பெரும் நெருக்கடியில் இருந்தார். நான் யாரைப் பற்றி எழுதுகிறேன் என்பது எனக்கு தெரிந்தது. ஆனால் யாருக்காக எழுதுகிறேன் என்று விளங்கவில்லை. எனது நாவலுக்கான கருப்பொருள் போராட்டங்களை நிகழ்த்தும் விவசாயிகள் அதை படிக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு இருக்கையில் நான் ஏன் ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என சிந்தித்தார். ஆங்கிலத்தில் எழுதுவதை கைவிட்டு, தனது தாய்மொழியான கிகுê மொழியில் எழுத முடிவெடுத்தார்.

இந்த முடிவுக்குப் பின்னால் 1969 இல் டாக்டர், செனகல்லில் நடைபெற்ற ‘அமெரிக்காவின் பண்பாட்டுக் கொள்கை’ என்ற யுனெஸ்கோ மாநாட்டில் வாசித்த திறவுகோல் கட்டுரையாக ‘தேசிய பண்பாட்டை நோக்கி’ என்று தலைப்பிலான அக் கட்டுரையில் மொழி பிரச்சனையை குறித்து தனது அழுத்தமான கருத்துக்களை எழுதியிருந்தார்.

‘ஆப்பிரிக்க மொழிகளை கற்பது அதிகரித்தால், மேலும் மேலும் தாய் மொழியில் எழுத ஆப்பிரிக்கர்கள் முன்வருவார்கள். இதன் மூலம் நமது படைப்பாக்கக் கற்பனைக்கான புதிய வழிகள் திறக்கும்’

கூகி அவர்கள் அடையாளம் மீட்பு காலனிய ஓர்மை அகற்றல், சிலுவையில் தொங்கும் சாத்தான் ( Petals on the blood ) A grain of whea, The river between,  weep not child, devil on the cross போன்ற நாவல்களையும் மீள் வருகை என்ற சிறுகதை, I will marry I went,  This time tomorrow, The wound in the heart (This time tomorrow  தொகுப்பில் ஒரு பகுதி) போன்ற நாடகங்களையும் எழுதியிருக்கின்றார்.

கூகி வெறும் ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல, அவர் ஓர் இலக்கியப் புரட்சியாளர். காலனித்துவத்தின் நிழலில் இருந்து தனது தாய்மொழியான கிகுêவில் எழுதத் துணிந்து, மொழியையும் கலாச்சாரத்தையும் மீட்டெடுக்கும் ஒரு சக்திவாய்ந்த போராட்டத்தின் சின்னமாக அவர் திகழ்கிறார். அவரது எழுத்துக்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுதந்திரத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கின்றன. ஆப்பிரிக்க இலக்கியத்திற்கு அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புகள் அளப்பெரியவை. தனது நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் நினைவுக் குறிப்புகள் மூலம், கூகி உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற வாசகர்களின் மனதை சென்றடைந்துள்ளார். அதில் நானும் ஒருத்தி.

கோபிகா நடராசா
கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More