Home இலங்கைதமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள்!

தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்டவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளார்கள்!

தேசிய மக்கள் சக்தியை இனவாதகக் கட்சி என்றார்கள்.

by admin
தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட – துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ். சாவக்கச்சேரியில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

‘நாடு தழுவிய ரீதியில் உள்ளுராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை இதுவிடயத்தில் நாம் வடகிழக்கில் கடைபிடிக்கவில்லை. இங்கு நடுநிலை வகித்தோம்.

நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை,  மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம். ஏனெனில் மக்களுக்கு சேவை செய்வதே எமது முதன்மை நோக்கமாகும். உள்ளுராட்சி சபைகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள்.

அதேபோல ஊழல், மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும் எமது உறுப்பினர்கள் செயற்படுவார்கள். மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் முன்னெடுக்கவில்லை. சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் யாழ். மாநகரில் வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும்.

கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட – துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட – ராஜபக்சக்களின் காலை நக்கி பிழைக்கின்றவர் எனக் கூறப்பட்ட – மக்களுக்கு எதிராக அராஜாங்களை கட்டவிழ்த்துவிட்டவர் – ஊடகவியலாளர்களைக் கொன்றவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது. இதனை மக்களும் புரிந்துகொண்டுள்ளனர்.

மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆசியமைக்கின்றனர்.

இப்படியானவர்கள்தான் தேசிய மக்கள் சக்தியை இனவாதகக் கட்சியெனவும், வாக்களிக்க வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் யாரென்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

அதேபோல தெற்கிலும் கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். கடந்த காலங்களில் ஒருவரையொருவர் எப்படி விமர்சித்துக்கொண்டனர். ஆனால் வெட்கம் இல்லாமல் – அதிகாரத்துக்காக – கொள்கை துறந்து கூட்டு சேர்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More