Home இலங்கைபருத்தித்துறை நகர சபையை தமழ்தேசிய பேரவை + சங்கு கூட்டணி கைப்பற்றியது!

பருத்தித்துறை நகர சபையை தமழ்தேசிய பேரவை + சங்கு கூட்டணி கைப்பற்றியது!

by admin

பருத்தித்துறை நகர சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தெரிவாகியுள்ளார்

பருத்தித்துறை நகர சபையின் தவிசாளர் மற்றும் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றைய தினம் (17.06.25)  பருத்தித்துறை நகர சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

15 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை நகர சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 5 ஆசனங்களையும்  இலங்கை தமிழ் அரசுக் கட்சி 4 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 2 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேட்சை குழு ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

தவிசாளர் பதவிக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வின்சன் டீ போல் டக்ளஸ் போலுக்கு 7 பேரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு  4 பேரும் ஆதரவு வழங்கினர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளிநடப்பு செய்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் இருவர் மற்றும் அர்ச்சுனா அணி ஆதரவு சுயேட்சை குழுவின் ஒருவர் வாக்கெடுப்பின்போது நடுநிலை வகித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More