Home இலங்கைதண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன் உயிரிழப்பு

தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன் உயிரிழப்பு

by admin

 

யாழ்ப்பாணத்தில் புகையிரத தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞன் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார். அரியாலை பகுதியைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது 20) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்துள்ளார்.அதன் போது, அந்நேரம் பயணித்த யாழ் ராணி புகையிரதம் இளைஞனை மோதியதில் இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.  உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More