Home இலங்கையாழில் கடுமையான காற்று – 12 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்!

யாழில் கடுமையான காற்று – 12 பேர் பாதிப்பு 04 வீடுகள் சேதம்!

by admin

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக வீசும் கடுமையான காற்று காரணமாக 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 04 குடும்பங்களை சேர்ந்த 12பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.

வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேலும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More